ஆசியா

பிரதமர் மோடியின் அருணாசலபிரதேச பயணத்துக்கு எதிராக சீனா கடும் கண்டனம்..

இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே பிரதமர் மோடி கடந்த 9-ந்தேதி அருணாசலபிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் உலகின் நீளமான இரட்டை சுரங்கப்பாதையும் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் மோடியின் அருணாசலபிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்வென் பின் கூறுகையில், சாங்னான் பகுதி (அருணாசல பிரதேசம்) சீனப் பகுதி. அதை இந்தியா, அருணாசலப்பிரதேசம் என்று அழைப்பதை சீன அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, அதை உறுதியாக எதிர்க்கிறது. அப்பகுதியை தன்னிச்சையாக மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை.

இந்தியாவின் நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையை சிக்கலாக்கும்.இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்கும். சீனா-இந்திய எல்லையின் கிழக்குப் பகுதிக்கு மோடியின் வருகையை சீனா கடுமையாகக் கண்டிக்கிறது. அதை உறுதியாக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content