பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!
தமிழக முதல்வர் விஜய், நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களை சந்திக்கும் நோக்கிலேயே அவரது டெல்லி வியம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேச்சு நடத்துவார் என தெரியவருகின்றது.
இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் தமிழக முதல்வர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளார்.
மேலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைக்கிறார்.




