வட அமெரிக்கா

கனடா – “அன்பான திருடரே” என கார் கண்ணாடியில் கடிதம் எழுதி வைத்த உரிமையாளர்!

கனடாவில் திருடர்களுக்காக கார் கண்ணாடியில் கடிதம் ஒன்றை எழுதி வைத்த வினோத நபர் பற்றிய தகவல் பதிவாகியுள்ளது.ரொறன்ரோவைச் சேர்ந்த கார் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

குறித்த நபரின் வாகனம் மூன்று தடவைகள் உடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நான்காம் தடவையாக வாகனம் உடைக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் குறித்த நபர் இவ்வாறு கடிதம் எழுதி ஒட்டியுள்ளார்.

“அன்பான திருடரே, தயவு செய்து கார் கண்ணாடியை உடைக்க வேண்டாம், வாகனத்தின் கதவு திறந்தே உள்ளது. உங்களது நாள் நல்ல நாளாக அமையட்டும்” என கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

ரொறன்ரோவில் அதிகளவில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த கடிதம் எழுதப்பட்ட வாகனம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காணொளியை பார்த்த பலரும் மனம் நெகிழ்ந்து பதிவுகளை இட்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content