ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகள்: புடின் பச்சைக்கொடி

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் விசேட தூதுவர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கொப் ஆகியோர் மொஸ்கோவிற்குச் சென்றுள்ளனர்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் விசேட தூதுவர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கொப் ஆகியோர் மொஸ்கோவிற்குச் சென்றுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்றில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்கொப் தெரிவித்துள்ளார்.

கிரெம்ளினில் புதினைச் சந்தித்த பின்னர் ரஷ்ய அரச தொலைக்காட்சியிடம் கருத்துத் தெரிவித்த அவர், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்பது மிகவும் முக்கியமான முன்னேற்றமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

எனினும், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஐரோப்பிய நாடுகள் உண்மையில் விரும்புகின்றனவா அல்லது போரைத் தொடர விரும்புகின்றனவா என்பதை அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைந்து தெளிவுபடுத்த வேண்டும் என புதின் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் படைகள் நிலைநிறுத்தப்பட்டால், அது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இதனால் போர் மீண்டும் ஆரம்பிக்கக்கூடும் என்றும் புதின் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்கத் தூதுவர்களை அயர்லாந்தின் டப்ளின் நகரில் சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்கவுள்ள செய்தியை வரவேற்றுள்ளார்.

மேலும், எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் போர் நிறுத்தம் மற்றும் மோதல்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அபுதாபியில் கடந்த வாரம் நடைபெற்ற ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள், ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தையாக அமைந்தன.

இதில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டதாக இரு தரப்பினரும் தெரிவித்த போதிலும், பிராந்திய எல்லைகள் தொடர்பான முக்கிய முரண்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதி நிலப்பரப்பு தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதிகளையும் ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற புதினின் கோரிக்கையை உக்ரைன் நிராகரித்து வருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி