ஐரோப்பா

இத்தாலியில் வீழ்ச்சி பாதையில் பிறப்பு விகிதம் – ஆசிரியர்களை குறைக்க நடவடிக்கை

இத்தாலியில் பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்து வருவதால், வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் விளைவாக, ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு தொழிற்சங்கங்கள், எதிர்கட்சிகள் மற்றும் அதிபர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அதிபர்களின் சங்க  ‘ஏ.என்.பி’ (ANP) உறுப்பினரான மரியோ ருஸ்கோனி Mario Rusconi,  மக்கள் தொகை சரிவு என்பது உண்மைதான், இது மிகவும் தீவிரமான சிக்கல். ஆனால், இதைக் காரணம் காட்டி பொதுக் கல்வி முறையை மேலும் பலவீனப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட 2027-ஆம் ஆண்டுக்கான வரைவு நிதிநிலை அறிக்கையின்படி, 2027-2028 கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களின் எண்ணிக்கை 4,925 ஆகவும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை 2,049 ஆகவும் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு மதிப்பீட்டின்படி, இந்த நடவடிக்கையின் மூலம் 2027-2028 காலகட்டத்தில் 336 மில்லியன் யூரோக்களை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது.

ஐரோப்பாவிலேயே மிக மோசமான மக்கள் தொகை நெருக்கடியைச் சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இத்தாலி உள்ளது. இது அந்நாட்டின் மாணவர் எண்ணிக்கையில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்