ஐரோப்பா

மனிதாபிமான உதவிபெற சென்றவர்கள் மீது ரஷ்யா தாக்குதல் – 26 பேர் பலி

உக்ரைன் ரஷ்யா இடையில் அரிதாக ஏற்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து மீளவும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில்  கெர்சன் தெற்குப் பகுதியில் ரஷ்யா தனது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது.

அங்குள்ள பாடசாலை கட்டிடம் ஒன்றை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் நேற்று அறிவித்தது.

இறந்தவர்களில் சிலர் உள்ளூர் பாடசாலைகளில் உதவி பெற வந்தவர்கள் என பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு திங்கட்கிழமையும் அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்பட்டன. மக்கள் அங்கு வந்து சேர்ந்த உடனேயே ரஷ்யர்கள் முதல் தாக்குதலை நடத்தினர்” என ஆளுநர் விவரித்துள்ளார்.

இதற்கிடையே போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான உக்ரேனின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்