அரசியல் இலங்கை செய்தி

இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை

இலங்கையை இராணுவ ஆட்சியை நோக்கிக் கொண்டுசெல்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையை இராணுவ ஆட்சியை நோக்கிக் கொண்டுசெல்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கைது செய்வதற்கான அதிகாரம் இதுவரை பொலிஸாருக்கு மாத்திரமே இருந்தது. ஆனால், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் ஊடாக அந்த அதிகாரம் இராணுவத்திடமும் ஒப்படைக்கப்படவுள்ளது.

தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டால், 24 மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அந்தக் கால எல்லை தற்போது மூன்று நாட்களாக மாற்றப்படவுள்ளது.

அதேபோன்று, அமைச்சின் செயலாளரால் ஒருவரை ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்க முடியும்.

இது இலங்கையை இராணுவ ஆட்சியை நோக்கி அழைத்துச் செல்லும் நடவடிக்கையாகும். இதனால், நாம் திறந்தவெளிச் சிறைக் கைதிகளைப் போன்று வாழ வேண்டிய நிலை ஏற்படும்” என்றார் தயாசிறி ஜயசேகர.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை