இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்திற்கு அருகே கொலை முயற்சி : பொலிஸார் குவிப்பு!

மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கொலை சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் முகாமிட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் முன்னிலையில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நால்வர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கத்திக்குத்து  தனிப்பட்ட விரோதம் காரணமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத நோக்கம் இல்லை என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்