கிரிமியன் பாலம் மீதான தாக்குதல் – கடுமையான பதிலடி தாக்குதல்களுக்கு தயாராகும் ரஷ்யா
ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, கருங்கடல் அல்லது எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்குத் தடை விதிப்பது குறித்து மொஸ்கோ இனி பரசீலிக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ஷென்செனில் நடைபெற்ற ஏபெக் உச்சிமாநாட்டில் சீன மற்றம் அமெரிக்க ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் புட்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புட்டினின் இந்த அறிவிப்பு முன்முனை பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள புட்டின், கிரிமியன் பாலம் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, எந்த உடன்பாடும் ஏற்படாது.
இந்தத் தாக்குதல்களுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
உக்ரைன் அந்த பாலத்தை தாக்கியதை விட எங்கள் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
மேலும் கீவ் குற்றம் சாட்டியது போல, அந்தப் பாலம் இராணுவ உபகரணங்களையோ அல்லது பெட்ரோலியப் பொருட்களையோ கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அது முழுக்க முழுக்க பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.




