பிரித்தானியாவில் கடையை உடைத்து ATM கொள்ளை
பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷையர் மாவட்டம், டொடிங்டன் பகுதியில் உள்ள கடையொன்றிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம், M1 அதிவேக நெடுஞ்சாலையின் இணைப்பு வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஹை ஸ்ட்ரீட்டிலுள்ள கடையொன்றை சேதப்படுத்தி அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மூவர் ஏ.டி.எம். இயந்திரத்தை வெள்ளை நிற வேனில் ஏற்றிச் சென்றதாகவும், பின்னர் M1 நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதைக்குச் செல்லும் 12ஆவது சந்தியின் இணைப்பு வீதியில் வேனையும் இயந்திரத்தையும் […]



