வட அமெரிக்கா

அமெரிக்கா- காதலி சுட்டு கொன்று விட்டு கூலாக ஷாப்பிங் செய்த சீக்கிய வாலிபர்…!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய வாலிபர் (29) ஒருவர் தனது காதலியுடன் (34) தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். பின்னர் அதே இடத்தில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியுள்ளார். இதுபற்றி வெளியான செய்தி அறிக்கையில், சிங் சம்பவத்திற்கு பின்னர் ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து சட்டை ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு புதிய சட்டையை போட்டு கொண்டு, பழைய சட்டையை தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.

துப்பாக்கி சூடு நடந்தது தெரிய வந்ததும், அந்த பகுதியில் ஊரடங்கு நிலை ஏற்பட்டது. பொலிஸார் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி குற்றவாளியை தேடினர். ஆனால் சிங், வணிக வளாகத்தில் இருந்து வெளியே போக வேண்டும் என கூறியுள்ளார்.

சாட்சிகள் மற்றும் கடைசியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர் சென்ற திசை உள்ளிட்ட பிற விவரங்கள் ஆகியவற்றை கொண்டு பொலிஸார், சிங்கை தேடி வந்தனர். இதன்பின் கண்காணிப்பு கேமரா உதவியுடன் சிங்கை பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்