உலகம்

அமெரிக்காவில் விமான சேவை முடக்கம் வழமைக்கு திரும்பியது

அமெரிக்க வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தகவல் தொடர்பு கோளாறு ஏற்பட்ட நிலையில் விமான நிலையங்கள் முடங்கின.

இதன்காரணமாக  பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகள் செய்வதறியாது விமான நிலையங்களில் தவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் வான் போக்குவரத்து நிர்வாகம் (FAA) நேற்று நாடு தழுவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டிருந்த விமான முடக்கத்தை நீக்கியுள்ளது.

இருப்பினும் விமான சேவைகள் படிப்படியாகவே வழமைக்கு திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

FlightRadar24 தளத்தின் தரவுகளின்படி, 6,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 8,600 விமானங்கள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நான்கு மணிநேரம் நீடித்த இந்த நாடு தழுவிய முடக்கம், விமான நிறுவனங்களின் கால அட்டவணையை பல நாட்களுக்குப் பாதிக்கக்கூடும் என்று வான் போக்குவரத்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்