கிரீன்லாந்து தொடர்பான ஒப்பந்தம் – பெல்ஜியத்திற்கான அமெரிக்க தூதர் வரவேற்ப்பு
கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்கா – டென்மார்க் இடையேயான ஒப்பந்தத்தை பெல்ஜியத்திற்கான அமெரிக்கத் தூதர் பில் வைட் Bill White , வரவேற்றுள்ளார்.
இது தொடர்பில் Europe Today நிகழ்ச்சியில் பேசிய அவர், “இது தீர்க்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்.
“அனைவரிடமும் நிம்மதியாக இருக்குமாறும், நிதானமாக இருக்குமாறும் நான் கூறினேன். எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னேன். நேற்று, எல்லாம் சரியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் தனது நாட்டிற்கு “பாதுகாப்பு மீதான நிரந்தரக் கட்டுப்பாட்டை” அளிப்பதாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் “எதிரி” நாடுகள் எதுவும் அந்த ஆர்க்டிக் தீவில் இராணுவத் தளத்தை வைத்திருக்க முடியாது என்றும், “எங்கள் வெளிப்படையான எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் கிரீன்லாந்தில் முக்கியமான முதலீடுகளைச் செய்ய முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




