பொழுதுபோக்கு

ரோல்ஸ் ராய்ஸ் காருக்குள் அதிதி செய்த செயலை பாருங்கள்… வைரலாகும் வீடியோ

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். முத்தையா இயக்கிய விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி. அப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அதிதி, முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கண்டார்.

அப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் அசர வைத்தார் அதிதி. அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

விருமன் படத்தில் நடித்து முடித்த கையோடு, சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வாய்ப்பையும் தட்டி தூக்கினார் அதிதி. இப்படமும் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது.

தொடர்ந்து 2 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் ராசியான ஹீரோயின் என பெயரெடுத்த அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

இதுதவிர சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராக உள்ள சூர்யா 43 படத்திலும் நடிகை அதிதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டிதூக்கும் அதிதி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

அதன்படி ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றபோது விஜய்யின் லியோ படத்தில் இடம்பெறும் நா ரெடி பாடலுக்கு குத்தட்டம் போட்டுள்ளார் அதிதி.

அந்த வீடியோ தான் தற்போது செம்ம வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த சிலர் விஜய் பட வாய்ப்பை பிடிக்க தான் அதிதி இப்படி ஆட்டம்போட்டுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு சிலரோ இது ரொம்ப கிரிஞ் ஆக இருப்பதாக அதிதியை கிண்டலடித்து வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content