பொழுதுபோக்கு

இதோ வந்துட்டாருல நம்ம ஆதி குணசேகரன்…. மாஸ் என்ட்ரி…. எதிர்நீச்சல் ப்ரோமோ

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தந்து.

பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தான் அடுத்த ஆதி குணசேகரன் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், மற்ற சில நடிகர்களின் பெயர்களும் இதில் அடிபட்டது.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் புதிய ஆதி குணசேகரனாக நடிக்கவிருப்பதாக வேல ராமமூர்த்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவால், ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என கதையை மாற்றி அமைந்தனர்.

தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க வந்துவிட்டதால், வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அதன் ப்ரோமோ வீடியோ தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது.

இதில் வேல ராமமூர்த்தியின் முகத்தை காட்டவில்லை என்றாலும், அது அவர் தான் என உறுதியாக கூற முடிகிறது. மாரி முத்துவை போல் வேல ராமமூர்த்தியும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்குவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்