பொழுதுபோக்கு

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்

பன்முகக் கலைஞரான டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘உயிருள்ள வரை உஷா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கங்கா (63).

பி.மாதவன் இயக்கி, தயாரித்த ‘கரையைத் தொடாத அலைகள்’, விசுவின் இயக்கத்தில் ‘மீண்டும் சாவித்திரி’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் கங்கா.

மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள இவர், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர், தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் கங்காவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிசெய்துள்ளனர்.

இவரது மறைவு திரையுலகைச் சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content