பொழுதுபோக்கு

விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கின்றது…

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் லியோ. காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லியோ படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் ஹிட்டையடுத்து லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் பசியும் அவ்வப்போது சில தகவல்களை பகிர்ந்து தீர்த்து வைக்கப்படுகின்றது.

நடிகர்கள் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நிலையில், மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்தப் படம் உருவாகிவருகிறது.

படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் நடிகர் விஜய் -த்ரிஷா இணைந்துள்ள நிலையில், அவர்களது வழக்கமான கெமிஸ்ட்ரி இந்தப் படத்திலும் வொர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் அடுத்தடுத்த வீடியோக்கள், போஸ்டர்களும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. நடிகர் விஜய்யின் கடந்த படம் வாரிசு வசூலில் சிறப்பாக அமைந்தாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான விஜய்யை கொடுத்தது. இந்நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கேங்ஸ்டர் படமான லியோவை வெற்றிப் படமாக்க வேண்டிய கட்டாயம் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது படத்தின் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வரும் சூழலில், தொடர்ந்து படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடைபெறவுள்ளது.

அந்தவகையில் இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தோடு நிறைவுபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளையும் இன்னும் 3 மாதங்களில் நிறைவு செய்து அறிவித்தபடி அக்டோபர் 19ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது போலவே, இந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளிலும் லியோ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விஜய் பிறந்தநாளையொட்டி லியோ படத்தின் கிளிம்ப்ஸ்சுடன் தளபதி 68 படத்தின் டைட்டில் வீடியோ, அறிவிப்பு வீடியோ, போஸ்டர்கள், பர்ஸ்ட் லுக் போன்றவற்றையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content