ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழர்

பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது.பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது.

இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அகதியான இவருக்கு அங்கு வாழ்வதற்கான சகல அனுமதிகளையும் பிரிட்டன் வழங்கியிருந்தது.

சிவகங்கனின் மனைவியும் பிள்ளைகளும் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவர். லண்டனின் தென்மேற்கு பகுதியில் வசித்துவந்த இவர் பிரிக்ஸ்டனில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்துவந்தார்.

இதேவேளை கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை சேர்ந்தவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்திய கும்பலின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 14 பேருக்கு எதிராக பிரான்ஸ் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.பிரிட்டிஸ் அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளின் சார்பில் இவரை 2022இல் முதலில் கைதுசெய்திருந்தனர்.

பிரான்ஸ் விடுத்த பிடியாணையை அடிப்படையாக வைத்து இவரை நாடு கடத்துமாறு 2022 நவம்பரில் நீதிபதியொருவர் உத்தரவிட்டார்.

See also  மலேசியாவில் பேருந்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 வயது இளைஞன்

எனினும் தனது மனைவி உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் தனது துணை அவருக்கு என தெரிவித்து அவரது சிவகங்கன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

எனினும், வெள்ளிக்கிழமை நீதிபதி அவரது மனுவை நிராகரித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content