உலகம் செய்தி

ஆப்கானிஸ்தானில் தேசிய விடுமுறை அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி ஆகஸ்ட் 31ஆம் திகதியை தேசிய விடுமுறையாக அறிவிக்க ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு முடிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறுவது ஆகஸ்ட் 31, 2021 அன்று நடைபெறும் என்பதால் ஆகஸ்ட் 31ஆம் திகதியை தேசிய விடுமுறையாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, அமைச்சரவை முடிவாக, அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ஆகஸ்ட் 31-ம் திகதி அதிகாரப்பூர்வமான தேசிய விடுமுறை என்று தலிபான் நிர்வாகம் அறிக்கை ஒன்றில் அறிவித்திருந்தது.

வேறு எந்த நாடும் இதுவரை தலிபான் ஆட்சியை முறையாக அங்கீகரிக்காத சூழலில் ஆகஸ்ட் 31, 2021ஐ தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதன் முதல் ஆண்டு நிறைவை தலிபான்கள் கொண்டாடினர்.

 

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி