ஐரோப்பா

சுவிஸில் விடுதியொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வெளிநாட்டவர்!

சுவிஸ் ரிசார்ட் ஒன்றில், வெளிநாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Nendaz என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

ஒருவர் சாலையோரம் விழுந்து கிடந்ததைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பொலிஸாருக்குத் தகவலளித்தார். மருத்துவ உதவிக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையிலும் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அவர் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள்.அந்த 24 வயது இளைஞர் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் அந்த பகுதியில் வாழ்ந்துவந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.பொலிஸார் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக சாட்சியங்களைத் தேடிவருகிறார்கள்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content