ஐரோப்பா செய்தி

பிரித்தானியா பொது தேர்தலில் வெற்றிபெற்ற 22 வயது இளைஞர்

சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2002 இல் பிறந்த சாம் கார்லின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினராகக் கருதப்படும், தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற இந்த இளைஞன் “நாடாளுமன்றத்தின் குழந்தை” என்று அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியில் 39 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சுமார் 22 வருடங்கள் அங்கம் வகித்த ஷைலேஷ் வாராவை தோற்கடித்து இம்முறை  நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார் சாம்.

தனது வெற்றி அரசியலில் ஒரு சக்திவாய்ந்த புரட்சி என்றும், மேலும் மேலும் இளைஞர்கள் அரசியலில் சேர இது வழிவகுக்கும் என்றும் சாம் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி