ஆசியா செய்தி

போட்டியின் போது சரிந்து விழுந்து இறந்த 17 வயது சீன பேட்மிண்டன் வீரர்

சீனாவை சேர்ந்த 17 வயது இளைஞரான ஜாங் ஜிஜி, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்தார்.

மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர் கீழே விழுந்து கிட்டதட்ட 40 வினாடிகள் கழித்தே மருத்துவர்கள் அவரை சோதனை செய்வது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

உடனே மருத்துவர்கள் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து சோதனை நடத்தி இருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாமா என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து அதிகாரிகளின் கேள்விக்கு, அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்ததாக இந்தோனேசிய பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி