உலகம்

கரோலினாவில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பச்சிளங் குழந்தை உயிருடன் மீட்பு

தெற்கு கரோலினாவில் மண்ணில் புதைக்கப்பட்ட 11 மாதங்களே ஆன ஆண் குழந்தையொன்று நேற்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையானது சுமார் 24 மணிநேரம் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கோவா ஷார்ப் (Koah Sharpe) என்ற அந்தப் பச்சிளம் குழந்தை,  நாய் கூண்டுக்குள் துணியால் சுற்றப்பட்ட நிலையில், காட்டுப்பகுதியில் மேலோட்டமாக மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது என்று லெக்சிங்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள லெக்சிங்டன் கவுண்டி ஷெரிப் ஜே கூன், நிச்சயமாக இறைவன் கருணையுள்ளவர். சற்று நேரத்திற்கு முன்புதான், 11 மாதக் குழந்தையான கோவாவை உயிருடன் மீட்டோம்.

அவன் உயிர் பிழைக்கப் போராடிக்கொண்டிருந்தான்; அழுதுகொண்டிருந்தான். ஒரு குழந்தை அழுவதைக் கேட்பது, நீங்கள் இதுவரை கேட்டிராத மிக மகிழ்ச்சியான ஒலியாக இருந்தது,” என்று தெரிவித்தார்.

மேலும் குழந்தையின் தந்தையான மைக்கேல் கோமர், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்