சிறிதரன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள்ளே எடுக்கப்பட்ட தீர்மானமாக இருந்தாலும் அத்தீர்மானம் உரியமுறையில் அறிவிக்கப்படாவிட்டால் அது திரிபு படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனவே அதனை உத்தியோக பூர்வமாக கட்சி எடுத்த […]













