அரசியல் இலங்கை செய்தி

ஆளுங்கட்சி பக்கம் தாவுவாரா ஹர்ஷ டி சில்வா?

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்று அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரசாங்கத்துடன் இணையவுள்ளார் என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது மூழ்கும் கப்பலாகும். அவ்வாறு மூழ்கும் கப்பலில் ஏறுவதற்கு நாம் தயாரில்லை.

ஹர்ஷ டி சில்வா அல்ல ஐக்கிய மக்கள் சக்தியில் எந்தவொரு உறுப்பினரும் இந்த அரசாங்கத்தில் பதவிகள் வகிக்கபோவதில்லை.

எவ்வாறான அழைப்புகள் விடுக்கப்பட்டாலும் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தில் எவ்வித பதவியையும் வகிக்கமாட்டார்.

தேர்தல் காலத்தில் தங்களை மலர்கள் எனவும், எதிரணியை புற்கள் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்தனர்.

ஆனால் தாங்கள் மலர்கள் என்பதை தற்போது அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.”– எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!