ஐரோப்பா

சீனா – ரஷ்யா உறவில் முன்னேற்றம் : புட்டின் நெகிழ்ச்சி!

Russian President Vladimir Putin meets with members of the Delovaya Rossiya (Business Russia) National Public Organisation and participants of the organisation’s 20th Congress and Forum via video link at the Kremlin in Moscow, Russia May 13, 2025. Sputnik/Alexander Kazakov/Pool via REUTERS ATTENTION EDITORS – THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ரஷ்யாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.

சீனப் பயணத்திற்கு முன்னதாக காணொளி வாயிலாக இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் ‘முன்னெப்போதும் இல்லாத நிலையை’ எட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் சமத்துவ அடிப்படையிலான கொள்கைகளில் ஒத்துழைக்கவும், “இறையாண்மை மற்றும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது உட்பட, இரு நாடுகளின் முக்கிய நலன்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும்”   தயாராக இருப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யாவும் சீனாவும் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் உறவுகளைத் தீவிரமாக விரிவுபடுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்