ஆஸ்திரேலியா கல்வி

எரிபொருள் மற்றும் உரம் கொள்முதல்: சீனா, புரூணையுடன் ஆஸ்திரேலியா அவசர ஒப்பந்தம்!

ஈரான் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகத் தடைகளைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய அரசு சீனா , புரூணை ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றை கொள்வனவு செய்யவுள்ளது.

இதற்குரிய இணக்கப்பாடு எட்டப்பட்டு, உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சீனப் பிரதமர் லி கியாங் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து 600,000 பெரல்களுக்கும் அதிகமான (சுமார் 100 மில்லியன் லீட்டர்) விமான எரிபொருள் ஆஸ்திரேலியாவை வந்தடையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதை அடுத்து, தனது உள்நாட்டுத் தேவையைப் பாதுகாப்பதற்காக பீஜிங் கடந்த மார்ச் மாதம் முதல் எரிபொருள் ஏற்றுமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

எனினும், ஆஸ்திரேலியாவின் ராஜதந்திர முயற்சியால் எரிபொருளை வழங்க பீஜிங் முன்வந்துள்ளது.

அதேவேளை விவசாயத் துறைக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில், புரூணையிடமிருந்து 38,500 மெட்ரிக் தொன் யூரியாவையும் ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

இந்த அவசரக் கொள்முதல்கள் அனைத்தும் ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து மற்றும் விவசாயப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சிறப்பு நிதியத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித