அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்காக ‘புலிப்புராணம்’ ஓதுகிறது மஹிந்த அணி!

” புலி டயஸ்போராக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே சுரேஷ் சலே இலக்குவைக்கப்பட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பயங்கரவாத தடைச்சட்டம் தவறானது என சுட்டிக்காட்டியே ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அச்சட்டத்தை பயன்படுத்தியே சுரேஷ் சலேவை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடக்கும்போதும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் சுரேஷ் சலே எமது நாட்டில் இருக்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் சலே ஏன் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்?

இந்த அரசாங்கம் ஆட்சிக்குவருவதற்கு புலி டயஸ்போரா உட்பட அடிப்படைவாதிகளே ஆதரவளித்தனர்.

நாட்டின் பாதுகாப்பை சீர்குலைப்பதும், எதிர்காலத்தில் பிரிவினைவாதம் ஏற்பட்டால் நாட்டுக்காக முன்னிலையாபவர்கள் ஒடுக்குவதுமே இவர்களின் நோக்கம்.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரிவினைவாதிகளின் தேவைகளையே நிறைவேற்றிவருகின்றது.

புலிகளை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு நல்கி இந்நாட்டுக்கு அமைதியை கொண்டுவந்தவர்தான் சுரேஷ் சலே. இன்று மக்களால் சுதந்திரமாக வாழ முடிகின்றதெனில் அதற்கு சுரேஷ் சலே போன்றவர்களின் அர்ப்பணிப்புதான் காரணம்.’ – என்றார் சாகர காரியவசம்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை