உலகம்

6,000 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்களை ஏற்றுக்கொண்டது அமெரிக்கா!

  • June 8, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவிலிருந்து கிட்டத்தட்ட 6,000 அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள் அனைவரும் வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட ஒரு குறிப்பாணையில், “தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் ஆப்பிரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆண்டொன்றிற்கு 7500 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்களை ஏற்றுக்கொள்ளவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய தற்போதுவரை 6000 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள், வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் இனரீதியான துன்புறுத்தலையும் […]

உலகம்

நியூயார்கில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கத்திகுத்து தாக்குதல்!!

  • June 8, 2026
  • 0 Comments

நியூயார்க் நகரத்தின் பரபரப்பான பென் ஸ்டேஷனுக்குள் ( Penn Station) நேற்று கத்திகுத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 06 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர்  ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த சிலமணி நேரங்களிலேயே தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறவிருந்த NBA இறுதிப் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தை காண ஜனாதிபதி ட்ரம்ப் வருகை […]

உலகம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் : மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ கடற்கரைக்கு அப்பால் பதிவாகிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து  பல ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 15 பேர் பலி! 129 பேர் காயம்!

உலகம்

ஓடுபாதையில் விபத்துக்குள்ளான ஜெட் விமானம் – இருவர் பலி!

  • June 8, 2026
  • 0 Comments

தனியார் ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. டொமினிகன் குடியரசில் உள்ள லா ரொமானா (La Romana International Airport) சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில்  விமானத்தை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் உயிரிழந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் இருந்தபோது விமானிகள் அவசரநிலையை அறிவித்ததாக டொமினிகன் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த அவசரநிலை […]

ஐரோப்பா

சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலனை!

  • June 8, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பிரதேசத்தை மொரிஷியஸுக்கு வழங்க பிரித்தானியா திட்டமிட்டிருந்த நிலையில் சட்ட சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக்கொள்ள ட்ரம்ப் நிர்வாகம்  திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த டியாகோ கார்சியா இராணுவத் தளத்தை உள்ளடக்கிய இந்தத் தீவுகளை வாங்கும் யோசனையை, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 16 எலும்புக் கூடுகள் அடையாளம்!

  • June 8, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றன. இதன்போது சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 16 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் 4 என்பு கூட்டு தொகுதிகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிழையான சத்திர சிகிச்சைகள் – NHSஐ நாடும் மக்களுக்கு அதிர்ச்சி!

  • June 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் NHS மருத்துவ சேவையில் இடம்பெற்ற பல முறைக்கேடுகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒருபோதும் நிகழக்கூடாத 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமை  அல்லது  பிழையான சத்திரச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது சுகாதார சேவையில் உள்ள முக்கிய தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்வுகளில் 166 தவறான  சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு செய்ய வேண்டிய சத்திரசிகிச்சை தவறுதலாக மாறி வேறு […]

ஐரோப்பா செய்தி

மீண்டும் போர் வெடித்தால் பாரிய நெருக்கடி ஏற்படும்: EU எச்சரிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் Kaja Kallas அழைப்பு விடுத்துள்ளார். சிலவேளை இந்தப் பதற்றம் முழுமையான போராக மாறினால், பிராந்தியம் முழுவதும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் தற்காலிக போர்நிறுத்தங்களும் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சைப்ரஸ் நாட்டின் நிகோசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் , வன்முறையைத் தவிர்த்து அமைதி […]

உலகம் செய்தி

அமைதியை கடைபிடிக்குமாறு பாகிஸ்தான் அவசர வேண்டுகோள்!

  • June 8, 2026
  • 0 Comments

அமைதியை அடைவதற்குரிய இறுதி இலக்கு மிக அருகில் இருப்பதால், அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் மீண்டும் போர் மூண்ட நிலையிலேயே , அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் முன்பை விட மிகவும் கடுமையான முறையில் […]

இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 05 ஆம் திகதிவரை பரீட்சைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் மட்டத் தேர்வுக்கான கால அட்டவணையை தேர்வுகள் திணைக்களம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.