சுரேஷ் சலே தொடர்பான விசாரணை – CIDஇற்கு அழைப்பு!
சுரேஷ் சலே தொடர்பான தொடர்பான விசாரணைகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சுரேஷ் சலேயின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் கோர மனித உரிமை ஆணைக்குழு முன்னதாகவே சி.ஐ.டிக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், சி.ஐ.டியினர் மற்றொரு திகதியை கோரியிருந்தனர்.
இந்நிலையில் சுரேஷ் சலே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மீளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் HRCSL ஏற்கனவே ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.





