“தனித்து போராட வேண்டியிருக்கும்” – நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்!!
இஸ்ரேல் ஈரானுடன் மீண்டும் போரைத் தொடங்கினால், அந்த நாடு தனித்துப் போராட வேண்டியிருக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த காரசாரமான தொலைபேசி உரையாடல் குறித்து செய்தி வெளியிட்ட Axios செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரானுக்கு எதிரான முழுமையான வெற்றியை அமெரிக்கா அறிவிக்கும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நாங்கள் இப்போது பேச்சுவார்த்தையில் இருக்கிறோம், அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்யத் தயாராக உள்ளனர்.
அவர்கள் எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள், மேலும் அணு ஆயுதங்கள் வேண்டாம் என்று சொல்லவும் தயாராக இருக்கிறார்கள்,”எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.





