300000 வீரர்களை திரட்டும் புட்டின் – உக்ரைனின் எஞ்சிய பகுதியை கைப்பற்ற தீவிர முயற்சி
இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரஷ்யா மேலும் 300,000 துருப்புக்களைத் அணித் திரட்டக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்த மொஸ்கோ முயற்சிப்பதால் புதிய வீரர்களை திரட்ட திட்டமிட்டு வருவதாக தெரவித்துள்ளார்.
ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் எனக் குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, டொனெட்ஸ்கில் உக்ரைன் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையில் புட்டின் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.
ரஷ்யப் படையினரின் பெரும் இழப்புகள் இருந்தபோதிலும், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா கொண்டிருந்த அதே அளவு உக்ரைனியப் பிரதேசத்தையே இந்த ஆண்டின் இறுதியிலும் அது கொண்டிருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜெலன்ஸ்கி மேலும் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ரஷ்யா 267,000 வீரர்களை இழந்துள்ளதாகவும், அவர்களில் சுமார் 155,000 பேர் கொல்லப்பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.




