உலகம்

ஜப்பானில் கடும் வெப்ப அலையை சமாளிக்க தெருக்களில் கட்டுப்பட்டுள்ள ஃபிரிட்ஜ்

  • July 24, 2026
  • 0 Comments

ஜப்பானில் கோடை காலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில், ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ எனும் புதுமையான குளிரூட்டும் மையங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்கள் தெருக்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. வீதிகளில் காணப்படும் குளிர்பான விற்பனை இயந்திரங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் உள்ளே வெப்பநிலை எப்போதும் 15°C அளவில் பராமரிக்கப்படுகிறது. ஒருவர் உள்ளே சென்று அமர்ந்தவுடன், தலை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் 5°C அளவிலான குளிர்ந்த காற்று வீசி, […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: சாணக்கியன் சுட்டிக்காட்டு

  • July 24, 2026
  • 0 Comments

இலங்கையில் அரச பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. 43 ஆண்டுகள் கடந்தும் நியாயம் வழங்கப்படவோ, எதுவும் நடக்கவோ இல்லை” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியல் கட்டளையின் 27/2 கீழ் வினாக்களை எழுப்புவதற்கு முன்னர், கறுப்பு ஜூலை கலவரம் குறித்துக் குறிப்பிட்ட சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். “இன்று கறுப்பு ஜூலை நினைவு தினமாகும். இற்றைக்கு 43 […]

இலங்கை

அர்ச்சுனாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்ய இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகத் தவறியதையடுத்து இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவரது ஜாமீன்தாரர்களும் ஆஜராகவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலியா சிட்னி Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது, தனது உயிரைப் பணயம் வைத்து சுமார் 20 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்சி சாரதிக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் நிரந்தர குடியுரிமை (PR) வழங்கி கௌரவித்துள்ளது. ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

பயங்கரவாத தாக்குதலில் இருந்த மக்களை காத்த இந்தியருக்கு குடியுரிமை வழங்கியது ஆஸ்திரேலியா

  • July 24, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா சிட்னி Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது, தனது உயிரைப் பணயம் வைத்து சுமார் 20 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்சி சாரதிக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் நிரந்தர குடியுரிமை (PR) வழங்கி கௌரவித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த 37 வயதான ரஹ்மத் பாஷா என்பவரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி 15 பேர் பலியான இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, ரஹ்மத் பாஷா […]

Stratford and Bow தொகுதியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுத் துறையின் ராஜாங்க அமைச்சராகவும் (junior Foreign Office minister) உதவி கொறடாவாகவும் ஆகவும் (Assistant Whip) நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா செய்தி

‘ஈழத் தமிழர்களின் சர்வதேசக் குரல்’ – உமா குமரனுக்கு உயரிய அங்கீகாரம்

  • July 24, 2026
  • 0 Comments

Stratford and Bow தொகுதியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுத் துறையின் ராஜாங்க அமைச்சராகவும் (junior Foreign Office minister) உதவி கொறடாவாகவும் ஆகவும் (Assistant Whip) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து Stratford and Bow தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார். எனினும்,, வெளியுறவு விவகாரக் குழுவிலிருந்து விலகுவதோடு, எழுத்துப்பூர்வ நாடாளுமன்றக் கேள்விகளைக் கேட்கும் உரிமையையும் இழக்கிறார். உமா குமரனின் இந்த நியமனம், வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) நாடாளுமன்ற […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணி மனிதப் புதைகுழியில் மழைக்கவசத்துடன் சிறுவனின் எலும்புக்கூட்டுத் தொகுதி மீட்பு

  • July 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு மழைக்கவசத்துடனும், காலில் காலுறை அணிந்தவாறும் சிறுவனின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 41ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. நேற்றைய அகழ்வின் போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்படட்ட 9 மனித என்புத் தொகுதிகள் […]

கட்டாய உழைப்புச் சிக்கல் தொடர்பாக பிரேசில் மற்றும் பிற 59 வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனக் கூறி, பிரேசில் அரசு அதனை நிராகரித்துள்ளது. உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தின் நியாயமற்ற வரி விதிப்பு: பிரேசில் நிராகரிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

கட்டாய உழைப்புச் சிக்கல் தொடர்பாக பிரேசில் மற்றும் பிற 59 வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனக் கூறி, பிரேசில் அரசு அதனை நிராகரித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கையின் கீழ் பிரேசிலில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 12.5% வரி விதிக்கப்படும். தனது பரஸ்பரச் சட்டத்தின் (Reciprocity Law) கீழ் பதிலடி நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கப்போவதாகவும், இந்த விவகாரத்தை உலக வர்த்தக அமைப்பின் (WTO) […]

கட்டாய உழைப்புத் தடைகளை (forced labor bans) செயல்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளிகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% வரையிலான புதிய வரிகளை டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை முதல் விதிக்கவுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலக நாடுகள்மீது ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் வர்த்தகப் போர்: 12.5 சதவீத வரி விதிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

கட்டாய உழைப்புத் தடைகளை (forced labor bans) செயல்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளிகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% வரையிலான புதிய வரிகளை டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை முதல் விதிக்கவுள்ளது. தற்காலிக 10% உலகளாவிய வரியின் காலம் முடியும் அதே நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% […]

ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத்தீ – இரவோடு இரவாக மக்கள் வெளியேற்றம்

  • July 23, 2026
  • 0 Comments

பிரான்சின் போர்டோ நகருக்கு மேற்கே காட்டுத்தீ கடுமையாகப் பரவியதைத் தொடர்ந்து, இரவோடு இரவாக 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தத் தீ சுமார் 2,000 ஹெக்டேர் நிலத்தை எரித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தீயின் தீவிரம் அதிகமாக இருந்தபோதிலும், இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

  • July 23, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை , ஆகஸ்ட் 9, 2026 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மண்டபங்கள் இதற்காக தயார் நிலையில் இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் வருகைப் பதிவேடுகள், அந்தந்தப் பாடசாலைகள் மூலம் சம்பந்தப்பட்ட கல்வி காரியாலயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் தகவல்களில் ஏதேனும் […]