சுவிஸில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாரிய தீவிபத்து
சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் தூரக் கிழக்கில் உள்ள துசிஸ் என்ற இடத்தில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக அவசரக்கால பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




