ஈழத்தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த அருண் ராஜ்குமார், மெர்சிடிஸ் அணியின் 'ட்ராக்சைட் பவர் யூனிட்' (Trackside Power Unit) பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். செய்தி விளையாட்டு

பார்முலா 1 வரலாற்றில் புதிய அத்தியாயம்: உலகமே வியந்து பார்த்த ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார்

  • July 1, 2026
  • 0 Comments

Austrian Grand Prix கார் பந்தய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, Mercedes அணியின் சார்பில் மேடைக்குச் சென்று, தயாரிப்பாளர்களுக்கான (Constructors’) வெற்றிக் கிண்ணத்தை ஏந்திய பிரித்தானிய தமிழ் பொறியியலாளரான அருண் ராஜ்குமார் , உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஈழத்தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த அருண் ராஜ்குமார், மெர்சிடிஸ் அணியின் ‘ட்ராக்சைட் பவர் யூனிட்’ (Trackside Power Unit) பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். மெர்சிடிஸ் மற்றும் அதன் வாடிக்கையாளர் அணிகளுக்கான பார்முலா 1 எஞ்சின்களை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் சோதிக்கும் […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் குடியேறிகளுக்கு எதிரான போராட்டம் – பலர் கைது, இராணுவம் குவிப்பு

  • July 1, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் நேற்று குடியேறிகளுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட 900 பேரை  கைது செய்துள்ளதாக தென்னாப்பிரிக்க பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்தாலும், சில சமயங்களில் வன்முறையாகவும் மாறி, கடைகள் சூறையாடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 120 பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 108 பேரணிகள் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் 12 பேரணிகளுக்கு பொலிஸாரின் தலையீடு தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார். இலங்கை செய்தி

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

  • July 1, 2026
  • 0 Comments

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று பிற்பகல் (01) ஜனாதிபதி அலுவலகத்தில் கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தனவிடம் கையளித்தார். கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் ( நிறுவன விவகாரங்கள்) […]

கருத்து & பகுப்பாய்வு

வினாடிக்கு 3.6 மீற்றர் பயணம் : உலகின் அதிவேக சிலந்தி அடையாளம்

  • July 1, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் காடுகளில் வாழும் சிலந்தியொன்று உலகின் அதிவேகமான சிலந்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலந்தியானது  வினாடிக்கு கிட்டத்தட்ட 3.6 மீட்டர் வேகத்தை எட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் க்ரீஃப்ஸ்வால்ட் (Greifswald) பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி (Imperial ) ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 160 இற்கும் மேற்பட்ட உயிருள்ள சிலந்தி இனங்கள் சோதிக்கப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சிலந்தியின் இயங்கும் வேகத்திற்கும் அதன் உடல் நிறைக்கும் இடையே ஒரு பொதுவான தொடர்பை ஆய்வு […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் எசெக்ஸ் மாகாணத்தில் விமான விபத்து – இருவர் பலி

  • July 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் எசெக்ஸ் (Essex) மாகாணத்தின் ஓங்கார் (Ongar) அருகே உள்ள வயல் ஒன்றில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நார்த் வீல்ட் (North Weald ) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த விமானம் நேற்று மதியம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்பு பணியாளர்கள் உயிரிழந்த இருவரின் சடலங்களை  மீட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு (AAIB) […]

குற்றப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை இந்த விசாரணையில் இருந்து நீக்குமாறு, சுரேஷ் சாலே தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார். இலங்கை செய்தி

‘விசாரணைகளில் திடீர் திருப்பம்’- கடவுச்சொற்களை வழங்குமாறு சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

  • July 1, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதிவாதி தரப்பால் முன்னர் செய்யப்பட்ட மனுக்கள் மீதும் நீதிவான் இன்று உத்தரவுகளை வழங்கினார். குற்றப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் […]

'டித்வா' சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீக்கம்

  • July 1, 2026
  • 0 Comments

‘டித்வா’ சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார். “டித்வா’ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனக் […]

ஐரோப்பா

லாவா குழம்புகளை வெளியேற்றி வரும் எட்னா எரிமலை

  • July 1, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் மிகவும் சுறுசுறுப்பான  எட்னா எரிமலை தற்போது எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இந்த எரிமலை கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதியன்று 3,000 மீட்டர் உயரத்தில் வெடித்து சிதறியது. இந்நிலையில் தற்போது  எரிமலை குழம்புகளை வெளியேற்றிவருகிறது. இந்த காட்சி ட்ரோன் மூலம் படமாக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் சிசிலியில் உள்ள எட்னா மலையில் அடிக்கடி வெடிப்புகள் ஏற்பட்டாலும், இந்த நிகழ்வுகள் பொதுவாக உள்ளூர் மக்களுக்கு இடையூறாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு 10,000 சாரதிகளுக்கு அபராத புள்ளிகள்

  • July 1, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு இங்கிலாந்தில், சாலையில் ஓட்டுவதற்குப் பாதுகாப்பற்ற வாகனங்களை ஓட்டிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகள் பிடிபட்டுள்ளனர். சாரதி மற்றும் வாகன உரிம முகமையின் தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டப்பட்ட ஆய்வின்படி, பழுதடைந்த பிரேக்குகள், பழுதடைந்த டயர்கள், ஸ்டீயரிங் மற்றும் பிற தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ள வாகனங்களை ஓட்டியதற்காக 2025ம் ஆண்டில் 10,054 சாரதிகளுக்கு அபராதப் புள்ளிகள் வழங்கப்பட்டன. புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 3,055 குறைவாகும். இருப்பினும், வாகனங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டதாலா அல்லது சாலைகளில் போக்குவரத்து […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு தனிப்பட்ட முறையில் போர் பயிற்சிகளை வழங்கிய சீனா – கசிந்த ஆவணம்

  • July 1, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு ரஷ்ய படைகளுக்கு சீனா தனிப்பட்ட முறையில் போர் பயிற்சி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயிற்சிக்காக ஜனாதிபதி  விளாடிமிர் புட்டினின் பாதுகாப்பு அமைச்சர் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்திருந்ததாகவும், குறைந்தது நான்கு ரஷ்ய மற்றும் சீனத் தளபதிகள் நேரடியாக பயிற்சி அளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது மேற்கத்தேய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் சீனா உதவிக் கரம் நீட்டுவதையும், ஆதரவளிப்பதையும் வெளிச்சம்போட்டு காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் பயிற்சி பற்றிய அறிவிப்புகளை […]