உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

  • June 26, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவான மின்டானோவில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 29 கிலோமீட்டர் (18 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தகவல் வெளியிட்டுள்ளது. மின்டானோவின் சில பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டாலும், உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் நிலநடுக்கத்தின் தாக்கத்தை மதிப்பிட்டு வருவதாகவும்,  ஏதேனும் பின் அதிர்வுகள் ஏற்படுகிறதா […]

உலகம்

நியூசிலாந்தில் மின் துண்டிப்பு : 200 விமானங்கள் இரத்து

  • June 26, 2026
  • 0 Comments

நியூசிலாந்தை  இன்று கடுமையான புயல் தாக்கியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் 4,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக  வெலிங்டன் மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெலிங்டனுக்கு வடகிழக்கில் உள்ள லோயர் ஹட் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவும் பதிவாகியுள்ளது. அதேநேரம் காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை வீசியதாகவும், இரவு நேரத்தில் […]

இந்தியா

மத்திய அமைச்சரவையில் மாற்றம்!! நிர்மலா சீதாராமனின் துறை மாற்றப்படுமா?

  • June 26, 2026
  • 0 Comments

அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உயர் மட்டத்தில் பல மாற்றங்கள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துறைகளிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிர்மலா சீதாராமன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாற்றப்படலாம். தர்மேந்திர பிரதான் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விலகக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. \சக்திகாந்த தாஸ், அனுராக் தாக்கூர், ஸ்ரீகாந்த் […]

ஐரோப்பா

ரஷ்யா மீது கடுமையான தாக்குதல்களை நடத்திய உக்ரைன்

  • June 26, 2026
  • 0 Comments

போர்முனையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளைக் குறிவைத்து, ரஷ்யாவின் எரிசக்தித் துறையை இலக்காகக் கொண்ட புதிய தொடர் தொலைதூரத் தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. கிராஸ்னோடார் பிராந்தியத்தில் உள்ள போல்டாவ்ஸ்கா எண்ணெய் கிடங்கும், உஃபா நகரில் உள்ள இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதல்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட உஃபா நகரில் உள்ள பாஷ்நெஃப்ட்-உஃபானெஃப்டெகிம் மற்றும் பாஷ்நெஃப்ட்-நோவோயில் சுத்திகரிப்பு நிலையங்கள், தற்போதைய போர் முன்னணியிலிருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. ரஷ்யப் பிரதேசத்தின் ஆழமான […]

உலகம்

இஸ்ரேலிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் பறவை மோதியதால் பரபரப்பு

  • June 26, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பயணித்த ஹெலிகாப்டர் பறவை மோதியதால், அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இஸ்ரேலிய ஊடகங்களின்படி, ஜனாதிபதி ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார். இதன்போது, ​​திடீரென ஒரு பறவை அவரது ஹெலிகாப்டர் மீது மோதியது. பறவை மோதியதன் காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் இஸ்ரேலிய ஜனாதிபதி மற்றொரு ஹெலிகாப்டரில் தனது பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை

  • June 26, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக்-யியோலின் மனைவி கிம் கியுங்-யியோனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் வாங்கியதற்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 2022 முதல் 2025 வரை யூன் சுக்-யியோலின் அதிபர் பதவிக் காலத்தில், முதல் பெண்மணி என்ற தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், 300 மில்லியன் வோனுக்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளை இலஞ்சமாகப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிவிக்க மேற்கொண்ட […]

கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

பாதாள குழுவுடன் உறவு: கட்சி உறுப்பினரை நீக்கியது சஜித் அணி

  • June 26, 2026
  • 0 Comments

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ரத்து செய்துள்ளது. கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். “2023 ஆம் ஆண்டளவில் அபேசிங்க கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ செயற்படவில்லை.” என்று SJP செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் […]

உலகம்

ஜப்பானில் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவு

  • June 26, 2026
  • 0 Comments

ஜப்பானின் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. டோக்கியோவிற்கு அருகிலுள்ள சிபா மாகாணத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சுமார் 50 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம்  மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு இபராகி மாகாணத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி சுமார் 01 மணிநேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னையா தணேஸ்வரன், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் கைது

  • June 26, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னையா தணேஸ்வரன், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குச்சவெளி மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தவர் எனவும் குறிப்பிடத்தக்கது. இவர், லஞ்ச ஊழல் ஆணை குழுவினால் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

பெரிய திட்டமிடல்கள் இன்றி, மிகக் குறைந்த ஆயுதங்களைக் கொண்டு திடீர் தாக்குதல்களை அவர்கள் நடத்துவதால், இவர்களைக் கண்காணிப்பது அல்-கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் (ISIL) அமைப்புகளைக் கண்காணிப்பதை விட மிகவும் கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈரானால் ஆபத்து: உளவுப் பிரிவு எச்சரிக்கை

  • June 26, 2026
  • 0 Comments

உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும்சூழ்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற குகுழுவொன்று, ஆஸ்திரேலிய மண்ணில் தீவைப்பு, பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் படுகொலைகளைக் கூட நிகழ்த்தக்கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ASIO-வின் தலைமை இயக்குநர் மைக் பர்கெஸ் (Mike Burgess) எச்சரித்துள்ளார். தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புச் சூழல் சிதைவடைந்து வருவதாகவும் உளவுத்துறை பிரதான சுட்டிக்காட்டியுள்ளார். சிட்னி Bondi Beach பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பெர்த்தில் […]