ஜப்பானில் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவு
ஜப்பானின் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
டோக்கியோவிற்கு அருகிலுள்ள சிபா மாகாணத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
சுமார் 50 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இபராகி மாகாணத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி சுமார் 01 மணிநேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





