ஐரோப்பா

ரஷ்யாவின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது!

  • May 8, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது. வரும் 10 ஆம் திகதிவரை இது நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தப் போர் நிறுத்தத்தை ‘விசித்திரமான மற்றும் திரிபுபட்ட’ தர்க்கம் என்று கண்டித்ததோடு, ரஷ்யா மீண்டும் போரைத் தொடங்குவதற்கு முன்பு கொண்டாடத் திட்டமிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த வாரத் தொடக்கத்தில் உக்ரைன் அறிவித்த ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை ரஷ்யா புறக்கணித்து தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது.  இதன் விளைவாக ஏராளமானோர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கொள்ளை முயற்சி : வங்கி ஊழியர்கள் பணயக்கைதிகளாக பிடிப்பட்டனர்!

  • May 8, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் சின்சிக் நகரில் உள்ள ஒரு வங்கியில் பலரை பணயக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு பணம் பறிக்கும் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களில், பணத்தை கொண்டுசெல்லும் வாகன ஓட்டுநர் மற்றும் ஒரு வங்கி ஊழியர் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய சந்தேகநபர்கள் வங்கிக்கு வெளியே ஒரு ஊழியரை மிரட்டிய பின்னர், அவரை  வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்புப் படைகள் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

132 பேரை பலியெடுத்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விபத்து திட்டமிட்டு செய்யப்பட்டதா?

  • May 8, 2026
  • 0 Comments

2022 ஆம் ஆண்டில்  சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான மேலதிக ஆவணங்கள் கசிந்துள்ளன. 132 பேர் உயிரிழக்க காரணமான இந்த விமான விபத்து விமானிகளின் பொறுப்பற்ற செயலின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது, இரண்டு விமானிகள் ஒரே நேரத்தில் எதிரெதிர் திசைகளில் விமானத்தைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கலாம் என்று விமான போக்குவரத்து நிபுணர் ஜெஃப் குசெட்டி (Jeff Guzzetti) தெரிவித்துள்ளார். அதேநேரம் நடுவானில் இரு என்ஜின்களுக்குமான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டமையால் மேற்படி விபத்து ஏற்பட்டிருக்கலாம் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு!

  • May 8, 2026
  • 0 Comments

தமிழகத்தை ஆள்வதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேசக்கரம் நீட்டியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெகவுக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி முதலில் ஆதரவு வழங்கியது. இதனையடுத்து விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இந்த நிலையில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது. இதனையடுத்து […]

இலங்கை செய்தி

வியட்நாம் புரட்சியாளர் ஹோ சிமின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!

  • May 8, 2026
  • 0 Comments

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (To Lam), இன்று (08) முற்பகல் கொழும்பு பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவேற்றார். இதன்போது, இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் நின்றிருந்த சிறுவர்கள், வியட்நாம் ஜனாதிபதிக்குத் தமது மரியாதையைச் செலுத்தினர். ஹோ சி மின் […]

இந்தியா செய்தி

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் அழிப்பு!

  • May 8, 2026
  • 0 Comments

”ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 13 போர் விமானங்கள் மற்றும் 11 விமானப்படை தளங்களை இந்தியப் படைகள் அழித்தன.” இவ்வாறு இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி தெரிவித்தார். காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்தாண்டு மே மாதம் 7 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இதன் […]

உலகம் செய்தி

ஈரானுக்கு மரண அடி கொடுக்கப்படும்: ட்ரம்ப் மிரட்டல்!

  • May 8, 2026
  • 0 Comments

ஈரான்மீது முன்னெப்போதையும்விட மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க கடற்படையின் மூன்று அதிநவீன போர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக சென்றபோது, ஈரான் அவற்றை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமெரிக்கக் கப்பல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்காவின் பதில் தாக்குதலில் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பல சிறிய படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் […]

ஐரோப்பா செய்தி

ஸ்டாமர் பதவி விலக வேண்டும் – தொழிற்கட்சி எம்.பி அழைப்பு!

  • May 8, 2026
  • 0 Comments

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என தொழிலாளர் கட்சி எம்.பி. ஜொனாதன் பிராஷ் அழைப்பு விடுத்துள்ளார். ஹார்ட்லிபூலில் (Hartlepool) தொழிலாளர் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து பிராஷின் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள் ஹார்ட்லிபூலுக்கும் தொழிலாளர் கட்சிக்கும் ‘மோசமானவை’ மற்றும் ‘பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை’ என்று அவர் விவரித்தார். ஸ்டார்மர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை நிர்ணயித்து, பரந்த அளவிலான தலைமைத் தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் அந்த எம்.பி. […]

உலகம் செய்தி

பிரிட்டன் அரசியலில் வரலாற்று திருப்பம்: Reform UK கட்சி பெருமிதம்

  • May 8, 2026
  • 0 Comments

பிரிட்டன் அரசியலில் ஒரு வரலாற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக Reform UK கட்சி தலைவர் Nigel Farage அறிவித்துள்ளார். Labour மற்றும் Conservative கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகளில் தனது கட்சி வெற்றி தமது கட்சி வெற்றிபெற்றுள்ளமை சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாரம்பரிய இடது மற்றும் வலதுசாரி அரசியல் பிம்பங்களை உடைத்து, நாட்டின் பல பகுதிகளில் Reform UK ஆதிக்கம் செலுத்துகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக எசெக்ஸ் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள் […]

ஐரோப்பா

உள்ளுராட்சி தேர்தல் – ஸ்டாமருக்கு பின்னடைவு!! வரலாறு படைத்த சீர்த்திருத்த Uk கட்சி!

  • May 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் பிரித்தானியாவின் சீர்த்திருத்த Uk கட்சி  குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுவருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளது.   ஆரம்ப அறிவிப்புகளில் 160-க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீர்த்திருத்த Uk கட்சி 210 இடங்களுக்கும் மேல் வெற்றிப்பெற்றுள்ளது. செஷயரில் உள்ள ஹால்டனில்,  சீர்த்திருத்த Uk கட்சி   15 கவுன்சிலர்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில், தொழிலாளர் கட்சி தான் பாதுகாத்து […]