ஐரோப்பா

ரஷ்யாவின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது!

ரஷ்யாவின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது. வரும் 10 ஆம் திகதிவரை இது நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தப் போர் நிறுத்தத்தை ‘விசித்திரமான மற்றும் திரிபுபட்ட’ தர்க்கம் என்று கண்டித்ததோடு, ரஷ்யா மீண்டும் போரைத் தொடங்குவதற்கு முன்பு கொண்டாடத் திட்டமிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த வாரத் தொடக்கத்தில் உக்ரைன் அறிவித்த ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை ரஷ்யா புறக்கணித்து தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது.  இதன் விளைவாக ஏராளமானோர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

அதேநேரம் சாத்தியமான தாக்குதல் அச்சங்களுக்கு மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அதிகரித்த பாதுகாப்பிற்கு மத்தியில் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!