ஐரோப்பா

ஜெர்மனியில் கொள்ளை முயற்சி : வங்கி ஊழியர்கள் பணயக்கைதிகளாக பிடிப்பட்டனர்!

ஜெர்மனியின் சின்சிக் நகரில் உள்ள ஒரு வங்கியில் பலரை பணயக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு பணம் பறிக்கும் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களில், பணத்தை கொண்டுசெல்லும் வாகன ஓட்டுநர் மற்றும் ஒரு வங்கி ஊழியர் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய சந்தேகநபர்கள் வங்கிக்கு வெளியே ஒரு ஊழியரை மிரட்டிய பின்னர், அவரை  வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்புப் படைகள் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!