செய்தி

‘ சரிவில் இருந்து மீள்வோம்: பிரதமர் பதவியில் தொடர்வேன்’

  • May 8, 2026
  • 0 Comments

‘ சரிவில் இருந்து மீள்வோம்: பிரதமர் பதவியில் தொடர்வேன்’ உள்ளாட்சிசபைத் தேர்தலில் லேபர் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு தாம் பொறுப்பேற்பதாக அக்கட்சியின் தலைவர் பிரதமர் Keir Starmer தெரிவித்தார். குறித்த தேர்தலில் திறமையான பல வேட்பாளர்கள் தோல்வி அடைந்தமை தொடர்பில் அவர் கவலை வெளியிட்டுள்ளார். அதேவேளை, பிரதமர் பதவியில் தான் தொடர்வார் எனவும் Keir Starmer அறிவித்துள்ளார். இத்தேர்தலில் கட்சி பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் முன்னோக்கி செல்வதற்குரிய தலைமைத்துவத்தை வழங்குவதற்குரிய இயலுமை தனக்குள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் சிக்கிய மூவர் பலி!! பலர் மாயம்!

  • May 8, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் சிக்கி குறைந்தது மூன்று மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் குறைந்தது 10 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வெடிப்பு ஏற்பட்ட நேரத்தில் மலையில் இருந்ததாக நம்பப்படும் குறைந்தது 20 மலையேறுபவர்களை மீட்க அவசர மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாயமானவர்கள் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும் சிங்கப்பூர் நாட்டவர்கள் என்று நம்பப்படுகிறது, இருப்பினும் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஹல்மஹேரா தீவில் […]

ஐரோப்பா

நெதர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு!

  • May 8, 2026
  • 0 Comments

நெதர்லாந்தின் ஆளும் கட்சியான D66 கட்சியின் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு பதிவாகியுள்ளது. ஹேக் நகரின் மையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு 09 மணிக்கு பிறகு இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். D66 கட்சியின் தலைவராகவும் இருக்கும் டச்சுப் பிரதமர் ராப் ஜெட்டன், கட்டிடத்தின் முன்வாசலில் உள்ள தபால் பெட்டி வழியாக பட்டாசுகளால் செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதாகக் கூறினார். […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளது!

  • May 8, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் நிறுத்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையே ஏற்பட்ட நேரடி மோதல்கள் காரணமாகப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அமெரிக்காவின் மூன்று போர்க்கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. ‘ஈரான் இன்று நம்முடன் விளையாடிப் பார்த்துள்ளது’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், […]

இலங்கை செய்தி

வியட்நாம் ஜனாதிபதியை வியக்கவைத்த இலங்கையின் பிரமாண்ட வரவேற்பு!

  • May 8, 2026
  • 0 Comments

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாமை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வியட்நாம் மற்றும் இலங்கைக்கிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பொலிஸ் குதிரைப்படைப் பிரிவினரின் மரியாதையுடன் ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு வியட்நாம் ஜனாதிதி அழைத்துவரப்பட்டார். இரு நாடுகளினதும் தேசிய […]

இலங்கை செய்தி

வியட்நாம், இலங்கைக்கிடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 8, 2026
  • 0 Comments

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (TO LAM) ஆகியோர் முன்னிலையில் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வியட்நாம் – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுற்றுலாத் துறை, பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பு, மதம், சிவில், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பொருளாதாரம், விஞ்ஞானம் […]

விளையாட்டு

டெல்லி, கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

  • May 8, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 51 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற […]

செய்தி பொழுதுபோக்கு

சரிகமபவில் பரபரப்பு: நடுவர்கள் சொன்ன வார்த்தை.. யார் அடுத்த இறுதி போட்டியாளர்?

  • May 8, 2026
  • 0 Comments

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இசை நிகழ்ச்சி Saregamapa Lil Champs Season5 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. யார் அடுத்த இறுதி போட்டியாளராக தேர்வாக போகிறார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. காலம் கலந்து ஜொலிக்கும் பாடல்களுடன் “ நெஞ்சம் மறப்பதில்லை சுற்று” இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீ இல்லாத பைனலிஸ்ட் எங்க கண்ணுல படலனு எஸ். பி. சரண் கூறும் […]

விளையாட்டு

தொடர் தோல்வியிலிருந்து மீண்டது லக்னோ அணி!

  • May 8, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 50 ஆவது லீக் ஆட்டத்தில் இறுதி பந்துவரை பரபரப்பும், விறுவிறுப்பும் ஏற்பட்டது. இப்போட்டியில் Lucknow Super Giants அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மழை காரணமாக 19 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ஓட்டங்களைப் பெற்றது. 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை Royal Challengers Bengaluru விரட்டியது. […]

உலகம் செய்தி

பெண் அடிமை வியாபாரம் , IS ஆதரவு: தாயகம் திரும்பிய ஆஸ்திரேலியப் பெண்கள் மீது வழக்கு!

  • May 8, 2026
  • 0 Comments

சிரியா அகதி முகாமில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பிய மூன்று பெண்கள் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவர் சிரியாவில் இருந்தபோது பெண்ணொருவரை அடிமை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை மாலை ஆஸ்திரேலியா வந்தடைந்த குழுவில் குறித்த பெண்களும் அவர்களது குழந்தைகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் டமாஸ்கஸிலிருந்து விமானம் மூலம் மெல்போர்ன் மற்றும் சிட்னிக்கு அழைத்து வரப்பட்டனர். ஐ.எஸ். ஆமைப்புடன் தொடர்புடைய குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். இன்று வெள்ளிக்கிழமை அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஐ.எஸ். […]