உலகம் செய்தி

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனா முழு ஆதரவு!

  • May 13, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளுக்கு சீனா தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு சீன வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் வாங் யி கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல்களைக் குறைத்து, பிராந்திய அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை சீன வெளிவிவகார […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை!

  • May 13, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய கடுமையான தாக்கங்கள் தொடர்பில் வரவு- செலவுத் திட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பாதுகாப்புக்காக பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 200 அமெரிக்க டாலர்களை எட்டினால் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. தற்போதைய பதற்றமான சூழலால் எரிபொருள் விநியோகம் தடைபட்டு, அதன் விளைவாக ஆஸ்திரேலியக் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு உயரும் அபாயத்தை திறைசேரி தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. […]

உலகம் செய்தி

வடகொரியாவில் தென்படும் ஆரோக்கியமான மாற்றம்!! அணுவாயுதங்களுக்கு பின்னுள்ள உலகம்!

  • May 13, 2026
  • 0 Comments

வடகொரியாவில் தென்படும் ஆரோக்கியமான மாற்றம்!! அணுவாயுதங்களுக்கு பின்னுள்ள உலகம்! வடகொரியாவில் வாகன நிறுத்துமிடத்தை பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தலைநகர் பியோங்யாங்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது, நகரில் முதல் முறையாகப் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்துள்ளதுடன், புதிய வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மின்சார வாகன மின்னேற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை அவசியமாக்கியுள்ளது. இந்த மாற்றம், சமீபத்தில் அங்கு வருகை தந்த மூன்று பார்வையாளர்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆய்வு […]

செய்தி பொழுதுபோக்கு

ஜனநாயகனுக்கு அடித்துள்ள அதிஷ்டம்!

  • May 13, 2026
  • 0 Comments

தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. கடந்த ஜனவரி 9-ம் ஆம் திகதி வெளியாகவிருந்த இப்படம் தணிக்கை பிரச்சினையால் திரைக்கு வரவில்லை. இதனால் ளபடத்தின் ஓடிடி உரிமையும் ரத்து செய்யப்பட்டது. மேலும், படமும் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் சிக்கலில் இருந்தனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் […]

செய்தி விளையாட்டு

பெங்களூரு , கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

  • May 13, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 57 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர் ஆகிய அணிகள் மோதுகின்றன. சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி 4 தோல்வியுடன் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி .5 தோல்வி 9 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முதல் 6 ஆட்டங்களில் […]

உலகம்

போர் அதிகார தீர்மானம் மீதான வாக்கெடுப்பு – குடியரசு கட்சியினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

  • May 13, 2026
  • 0 Comments

ஈரான் மீதான ட்ரம்பின் போரை நிறுத்துவதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு குடியரசுக் கட்சியினரை அமெரிக்க செனட்டர் சக் ஷூமர் (Chuck Schumer) வலியுறுத்தியுள்ளார். ட்ரம்ப் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மறுப்பதால், அமெரிக்கர்கள் ஒரு கேலன் பெட்ரோலுக்கு $4.50-க்கு மேல் செலுத்துகிறார்கள்.” இந்நிலையில் செலவுகளை குறைக்கவும், துருப்புக்களை பாதுகாக்கவும் ஏதுவாக போரை முடிவுக்குக் கொண்டுவருவற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, அவர் கோரிக்கை விடுத்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான போர் அதிகாரத் தீர்மானத்தை ஜனநாயகக் கட்சியின் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி போர் […]

இலங்கை செய்தி

வடக்கு நிலைவரம் குறித்து ஆஸ்திரேலிய தூதுவருக்கு விளக்கம்!

  • May 13, 2026
  • 0 Comments

வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பு இன்று (13.05.2026) புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும் கடற்றொழில் துறைகளின் மேம்பாடு, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள காணிப் பிரச்சினைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால […]

உலகம்

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட படகு விபத்து – 14 பேர் மாயம்!!

  • May 13, 2026
  • 0 Comments

இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகொன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் மாயமாகியுள்ளதாக மலேசிய கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேராக்  (Perak ) மாநிலத்தில் உள்ள பாங்கோர் (Pangkor) தீவுக்கு அருகே நேற்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஏழு பெண்கள் உட்பட 23 இந்தோனேசியர்கள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் இணைந்து மீட்டதாக  மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மே 9 அன்று இந்தோனேசியாவின் கிசரானில் (Kisaran) இருந்து புறப்பட்டது […]

உலகம் செய்தி

முடிவுக்கு வருமா அமெரிக்க, சீன வர்த்தகப் போர்?

  • May 13, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இன்று (13) பீஜிங் நோக்கி பயணமானார். என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang உள்ளிட்ட முக்கியத் தொழிலதிபர்கள் டிரம்புடன் இணைந்து பயணித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்களைத் தணிக்கவும், விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய ஒப்பந்தங்களை எட்டும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெறுகின்றது. ஈரானுடனான போர் மற்றும் உள்நாட்டுப் பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளால் டிரம்ப் அரசியல் […]

ஆஸ்திரேலியா செய்தி

உக்ரைன் பொருட்களுக்கு வரி விலக்கு நீட்டிப்பு: ஆஸ்திரேலிய பாதீட்டில் முக்கிய முடிவு!

  • May 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் 2026 – 27 இற்கான வரவு- செலவுத் திட்டத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதற்கு உரிய ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், ஆஸ்திரேலியா தனது அண்டை பிராந்தியமான இந்தோ-பசிபிக் பகுதிக்கு முன்னுரிமை அளித்துள்ளது. அதேபோல 2026 பெப்ரவரியில் கைச்சாத்திடப்பட்ட ‘இந்தோனேசியா-ஆஸ்திரேலியா பொது பாதுகாப்பு ஒப்பந்தத்தை” செயல்படுத்த 33.2 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்தியாவுடனான விரிவான மூலோபாய கூட்டாண்மையின் அடுத்த […]