போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனா முழு ஆதரவு!
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளுக்கு சீனா தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு சீன வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் வாங் யி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல்களைக் குறைத்து, பிராந்திய அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை சீன வெளிவிவகார அமைச்சர் பாராட்டினார்.
இந்த இராஜதந்திர முயற்சியில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவும், தேவையான உதவிகளை வழங்கவும் சீனா தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியை மீட்டெடுக்கும் இந்த முக்கிய பணியில் பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்று சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.





