மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ள ட்விட்டர் தளம்
ட்விட்டரைப் போலவே தோற்றமளிக்கும், ட்விட்டரைப் போலவே ஓரளவு செயல்படும் மற்றம் ட்விட்டர் என்றே அழைக்கப்படும் தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டரின் அசல் முன்னாள் பொது ஆலோசகரும், நிர்வாகக் குழு உறுப்பினருமான ஸ்டீபன் கோட்ஸ் Stephen Coates உள்ளிட்டோரால் நிறுவப்பட்ட, வர்ஜீனியாவைச் சேர்ந்த ‘ஆபரேஷன் ப்ளூபேர்ட்’ Operation Bluebird என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த வாரம் Twitter.now-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
கோட்ஸ் இந்த அறிவிப்பை லிங்க்ட்இன் தளத்தில் வெளியிட்டு, “உங்கள் முன்னாள் நிறுவனத்தை மறந்துவிடுங்கள். பறவை மீண்டும் வந்துவிட்டது” என்று கூறினார்.
அவரது செய்தியில், Twitter.now என்பது “பழைய தளத்தை மீண்டும் உருவாக்கும் முயற்சி அல்ல” என்றும், மாறாக “பேச்சு சுதந்திரம், சென்றடைதல் சுதந்திரம் அல்ல” “freedom of speech, not freedom of reach”. என்ற கொள்கையின் அடிப்படையில், பயனர்கள் தங்கள் ஃபீட்களில் எந்த வகையான உள்ளடக்கம் வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அனுமதிக்கும் ஒரு சேவை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.




