ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல் – பின்லாந்தில் நிலைநிறுத்தப்படும் ஸ்வீடன் துருப்புகள்
ஸ்வீடனின் இராணுவம் இந்த ஆண்டின் இறுதிவரை பின்லாந்தின் பிரதேசத்தைக் கண்காணித்து பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் என்று பின்லாந்தின் பாதுகாப்புப் படைகள் இன்று தெரிவித்தன.
இதற்காக கிரிப்பன் போர் விமானங்கள் மற்றும் கொர்வெட் போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஸ்வீடன் உபகரணங்கள் குறிப்பாக வான்வழி கண்காணிப்பை வலுப்படுத்துகின்றன என்றும் பின்லாந்தின் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.
நேட்டோவின் இரண்டு புதிய உறுப்பினர்களான இவ்விரு நாடுகளும் ஏற்கனவே ஒரு வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.
பின்லாந்து ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் (833 மைல்) நீளமுள்ள கிழக்கு எல்லையைக் கொண்டுள்ளது.
அப்பகுதியில் இருந்து வரம இராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க ஸ்வீடனின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
இதற்கமைய போர் விமானங்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல் திறன் கொண்ட கப்பல்கள் தவிர, தரை அடிப்படையிலான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளையும் ஸ்வீடன் வழங்கக்கூடும் என்று ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் தெரிவித்துள்ளார்.




