ஐரோப்பா

உக்ரைனால் வந்த வினை – லாட்வியப் பிரதமர் எவிகா சிலினா பதவி விலகினார்!

  • May 14, 2026
  • 0 Comments

லாட்வியப் பிரதமர் எவிகா சிலினா (Evika Silina) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரஷ்யாவை நோக்கிச் சென்ற உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் லாட்விய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில்  அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்  ஆண்ட்ரிஸ் ஸ்ப்ரூட்ஸை ( Andris Spruds) சிலினா பதவிநீக்கம் செய்திருந்தார். சிலினாவின் இந்த நடவடிக்கைக்கு ஸ்ப்ரூட்ஸின் முற்போக்குக் கட்சி அதிருப்தி தெரிவித்ததோடு, ஆளும் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவையும் திரும்பப் […]

உலகம்

பொதுமன்னிப்பு வழங்க தயாராகும் ட்ரம்ப் : பொது ஊழலை இயல்பாக்குவதாக விமர்சனம்!

  • May 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் 250வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, 250 ஜனாதிபதி மன்னிப்புகளை வழங்குவது குறித்து டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்புகள் அவரது பிறந்த நாளான ஜூன் 14 அல்லது ஜூலை 4 அன்று வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ட்ரம்ப் பதவியேற்றபொழுது ஜனவரி 6 கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை பல அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்பை கொண்டுவந்தது. இந்நிலையில் தற்போது மீண்டுமொருமுறை இந்த நடவடிக்கை […]

உலகம்

தீர்க்கப்படாத பிரச்சினைகள் – இன்னும் பல மாதங்களுக்கும் தொடரும் மோதல் போக்கு!!

  • May 14, 2026
  • 0 Comments

ஈரானுடனான மோதல், தீர்க்கப்படாத முக்கியப் பிரச்சினைகள் காரணமாக பல மாதங்களுக்குத் தொடர வாய்ப்புள்ளதாக  அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ இயக்குநரான லியோன் பனெட்டா (Leon Panetta) எச்சரித்துள்ளார். முக்கியமான உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது என்றும், அது நடைமுறையில் “நமது தலையில் துப்பாக்கியை வைத்திருப்பது” போல உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் அல்லது தரைப்படைகளை நிலைநிறுத்துவதன் செயல்திறனையும் அவர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தேடப்படும் 12 குற்றவாளிகள் – ஸ்பெயின் செல்வோருக்கு எச்சரிக்கை!

  • May 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தேடப்படும் 12 குற்றவாளிகள் ஸ்பெயினில் தங்கியிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகமை (NCA) ,  ஸ்பானிய காவல்துறை மற்றும் கிரைம்ஸ்டாப்பர்ஸ் ஆகியவை இன்று தங்களின் சமீபத்திய “குற்றவாளிகள் பட்டியலை” வெளியிட்டன. இதற்கிடையே ‘ஆபரேஷன் கேப்டூரா’வின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ் 111 குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் பெரும்பாலும் ஸ்பெயினில் உள்ள வெளிநாட்டினரை தேர்ந்தெடுத்து சட்டவிரோத செயல்களை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்கிறேன்; திமுக தலைவர்!

  • May 14, 2026
  • 0 Comments

“ தேர்தல் தோல்விக்கு கட்சி தலைவர் என்ற முறையில நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் ஆட்சியை அமைத்திருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வந்தால் வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். […]

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை : 96 பேர் உயிரிழப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பருவம் தவறிய கடுமையான புயல், கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக குறைந்தது 96 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் நிலைமை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மின்விநியோகத் தடை மற்றும் அலைபேசிகளை அடைய முடியாத நிலை ஏற்பட்டமையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தடைபட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனால், சேதங்களை முழுமையாக மதிப்பிடுவதிலும் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. […]

உலகம்

இணையவழி மோசடி – மரண தண்டனை விதிக்க தயாராகும் மியன்மார்!

  • May 14, 2026
  • 0 Comments

இணையவழி மோசடி மையங்களில் வேலை செய்வதற்காக தொழிலாளர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை தடுத்துவைத்தல்,  வற்புறுத்துவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை மியன்மார் அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. தொடர்புடைய சட்டமூலம் இன்று மியன்மார் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த வரைவுச் சட்டம், “ஒருவரை இணையவழி மோசடிகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தும் நோக்கத்திற்காக, அவருக்கு எதிராகச் செய்யப்படும் வன்முறை, சித்திரவதை, சட்டவிரோதக் கைது மற்றும் தடுப்புக்காவல், அல்லது கொடூரமான நடத்தை” ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகுக்கும். போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரில், இணைய மோசடி மையங்கள் […]

இலங்கை செய்தி

யாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: NPP புறக்கணிப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரம் ஆரம்பித்துள்ள நிலையில், யாழ் மனநகரசையிலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் மாநகரின் முதல்வர் மதிவதனி தலைமையில், நடைபெற்ற குறித்த அஞ்சலியின்போது சபா மண்டபத்தில் வைக்கப்பட்ட பிரத்தியேக நினைவுப் படத்தின் முன்னாக ஈகைச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி என்பன புறக்கணித்தன.

இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 3,475 பேர் பாதிப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

இலங்கையில் புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மரணமொன்று பதிவாகியுள்ளது. 88 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 489 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 310 பேர் 8 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

ஈரான் போர் குறித்து விரிவான பேச்சு இல்லை!

  • May 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பின்போது , உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து பேசப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. குறிப்பாக ஈரான் போர் தொடர்பில் பீஜிங் ஒரு ஆக்கபூர்வமான தீர்வை வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்பினாலும், இது பற்றி விரிவாக கலந்துரையாடப்படவில்லை என தெரியவருகின்றது. ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்க சீனாவின் உதவியை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. ஆனால் சீனா இதில் நேரடியாக தலையிடாமல் நடுநிலை வகித்துவருகின்றது. ட்ரம்ப் சீனா வருவதற்கு முன்னர் ஈரான் வெளிவிவகார அமைச்சர் […]