உலகம் செய்தி

கென்யாவில் போராட்டக்கார்கள் மீது கண்ணீர்புகைக்குண்டு வீச்சு

கென்யாவில் இறக்குமதி வரியை நீக்கக் கோரி சிறுவணிக வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், மத்திய நைரோபியில் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் இன்றைய தினம் மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதிகளின் குறைவான அறிவிப்பு மற்றும் குறைவான மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 20 முதல் வரியை உயர்த்த கென்ய வருவாய் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இது விதிமுறைகளுக்கு இணங்கும் வணிகங்களுக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் பாதகமாக அமைவதாகவும் வாரியம் சுட்டிக்காட்டியது.

இந்த மாற்றம், சரக்குகளைத் தீர்வு செய்வதற்கான செலவை அதிகரிக்கும் என்றும், இறக்குமதி செலவுகளைக் குறைக்க ஒருங்கிணைந்த சரக்கு அனுப்பீடுகளை நம்பியிருக்கும் சிறு வணிகங்களைப் பாதிக்கும் என்றும் வணிகர்கள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்தே இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி