எதிரணி வலுவாகவே உள்ளது: சஜித் சூளுரை
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் தாக்கம் போதுமானதாக இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பண்டாரவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அஞ்சியவர்களே, எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் குறித்து தவறான கருத்துகளை பரப்புகின்றனர்.
மேலும் ஆளுங்கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே சில அரசியல் முகவர்கள் இப்படியான கருத்துகளை முன்வைக்கின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி மிகவும் வலுவாகச் செயற்பட்டு வருகின்றது.
நாட்டின் முன் தற்போது உள்ள ஒரே நம்பகமானதும் வலுவானதுமான அரசியல் மாற்று மாற்று சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும்.
எதிர்காலத்தில் மக்களின் நலனை முன்னிறுத்தி சரியான அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு கட்சி தயாராக உள்ளது.”- என்றார் சஜித் பிரேமதாச.




