ஐரோப்பா

பிரித்தானியாவில் தேடப்படும் 12 குற்றவாளிகள் – ஸ்பெயின் செல்வோருக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவின் தேடப்படும் 12 குற்றவாளிகள் ஸ்பெயினில் தங்கியிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகமை (NCA) ,  ஸ்பானிய காவல்துறை மற்றும் கிரைம்ஸ்டாப்பர்ஸ் ஆகியவை இன்று தங்களின் சமீபத்திய “குற்றவாளிகள் பட்டியலை” வெளியிட்டன.

இதற்கிடையே ‘ஆபரேஷன் கேப்டூரா’வின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ் 111 குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குற்றவாளிகள் பெரும்பாலும் ஸ்பெயினில் உள்ள வெளிநாட்டினரை தேர்ந்தெடுத்து சட்டவிரோத செயல்களை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள், குறிப்பாக ஸ்பெயினில் உள்ள பிரித்தானியர்கள்  மற்றும் விடுமுறைக்குச் செல்பவர்கள், மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலை மதிப்பாய்வு செய்து, பிரத்யேக தொலைபேசி எண்கள் அல்லது ஆன்லைன் படிவம் வழியாக க்ரைம்ஸ்டாப்பர்ஸுக்கு அநாமதேய தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!