ஐரோப்பா செய்தி

தலைமைத்துவ மாற்றத்தை வலியுறுத்தி பிரிட்டன் சுகாதார அமைச்சர் ராஜினாமா!

  • May 15, 2026
  • 0 Comments

பிரிட்டன் பிரதமர் Keir Starmer கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இருந்து Wes Streeting விலகியுள்ளார். சுகாதார அமைச்சராக பதவி வகித்த அவர், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல்களில் லேபர் கட்சி சந்தித்த பின்னடைவு காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என லேபர் கட்சிக்குள்ளேயே வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன. 30 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக திரும்பியுள்ளனர். இந்நிலையில் Wes Streeting பதவி துறந்துள்ள தலைமை மாற்றத்தையும் […]

உலகம்

UAE4இன் கடற்கரைக்கு அருகில் இருந்த கப்பலை கைப்பற்றிய மர்மநபர்கள்!

  • May 14, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) கடற்கரைக்கு அப்பால் நங்கூரமிட்டிருந்த பெயரிடப்படாத கப்பல் ஒன்றை மர்ம நபர்கள் தற்போது ஈரானை நோக்கிக் கொண்டுச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. குறித்த கப்பலானது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து 38 கடல் மைல் வடகிழக்கில், ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு நுழைவாயிலுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரை இரகசியமாக சந்தித்ததாக […]

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு நாளைய தினம் சிறப்பு விடுமுறை!

  • May 14, 2026
  • 0 Comments

தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, ஹட்டன் கல்வி மண்டலத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நாளைய தினம் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்களின் பேரில் ஹட்டன் மண்டல கல்வி அலுவலகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ஹட்டன் கல்வி மண்டலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறையாக அறிவிக்குமாறு, அங்குள்ள அனைத்து முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற தேவைகளுக்காக நாளை பள்ளிக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம்

ஜப்பானில் அதிகரிக்கும் கரடி தாக்குதல்கள் : ஓநாய் ரோபோக்களுக்கு பெருகும் ஆதரவு!

  • May 14, 2026
  • 0 Comments

ஜப்பானில் கரடிகளை விரட்டியடிக்க ரோபோக்களை பயன்படுத்த ஆதரவு பெருகி வருகிறது. இதற்கமைய காட்டு விலங்குகளை விரட்டுவதற்காக அனிமேட்ரானிக் ஓநாய்களை (animatronic wolves) ஓட்டா செய்கி நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது அந்த நிறுவனத்திற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் மாத்திரம் 50 ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில் அந்த சாதனத்தை விரைவாக வழங்குவதற்கு முடியாமல் திணறுவுதாக  அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். “நாங்கள் அவற்றை கையால் உருவாக்குகிறோம். எங்களால் இப்போது அவற்றை போதுமான வேகத்தில் உருவாக்க முடியவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களை […]

உலகம்

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக சீனாவின் 30 கப்பல்கள் செல்ல ஒப்புதல்!

  • May 14, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீனாவின் 30 கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியை ராணுவமயமாக்கும் ட்ரம்பின் திட்டத்திற்கு சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்  எதிர்ப்பு தெரிவித்ததை வரவேற்கும் முகமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் திறந்தே உள்ளது. ஆனால், இந்நீர்வழி வழியாகச் செல்லும்போது அவை ஈரானிய கடற்படைப் படைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இலங்கை – பெலாரஸ்: வான் வழி போக்குவரத்து குறித்து ஒப்பந்தம் கைச்சாத்து!

  • May 14, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வான்வழிப் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பெலாரஸ் போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் மேற்படி ஒப்பந்தங்களை பரிமாற்றிக்கொண்டனர். குறித்த ராஜதந்திர நகர்வானது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பொருளாதார மற்றும் பயணப் பரிமாற்றங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, பெலாரஸ் வெளிவிவகார […]

இலங்கை செய்தி

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’: வவுனியாவில் அஞ்சலி!

  • May 14, 2026
  • 0 Comments

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ இன்று (14) காலை வவுனியாவை சென்றடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை அடைந்தது. இதன்போது, வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி செலுத்தியதுடன் அதனைத் தொடர்ந்து மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் […]

இலங்கை செய்தி

மின்னல் தாக்கி இளைஞன் பலி: யாழில் சோகம்!

  • May 14, 2026
  • 0 Comments

மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலியான பெருந்துயர் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ். சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் இன்றையதினம் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அனர்த்தம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை செய்தி

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் மாநகர சபைக்கே சொந்தம்: தீர்மானம் நிறைவேற்றம்

  • May 14, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் யாழ். மாநகர சபைக்கே முழுமையாக உரித்தானது என்றும், அதில் எவரும் அத்துமீறி உள்நுழைய முடியாது என்றும் யாழ். மாநகர சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மேயர் திருமதி விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மாநகர சபைக்கான முதலீடுகளும் சொத்துக்களும் சபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மேயருமான திருமதி […]

இலங்கை கல்வி

சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்!பொலிஸார் வலை

  • May 14, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். தேவபுரம், காளிகோவில் வீதி, மொறக்கட்டாஞ்சேனையைச் சேர்ந்த பத்மராஜா டினேஸ் (வயது 36) என்ற கைதியே தப்பியோடியுள்ளார். நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் 3 மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. சம்பவ தினமான இன்று காலை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரைக் கட்டுமானப் பணிகளுக்காகச் சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். […]